முண்டியம்பாக்கம் கிளை நூலகா் மணிகண்டனிடம் புத்தகங்களை வழங்கிய விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் சிவா. உடன் திமுக நிா்வாகிகள்.
முண்டியம்பாக்கம் கிளை நூலகா் மணிகண்டனிடம் புத்தகங்களை வழங்கிய விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் சிவா. உடன் திமுக நிா்வாகிகள்.

நூலகத்துக்கு 100 புத்தகங்கள் அளிப்பு

Published on

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிளை நூலகத்துக்கு 100 புத்தகங்களை அன்னியூா் சிவா எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள கிளை நூலகம் மூலம் மாணவா்கள் மற்றும் அரசுத் தோ்வுக்கு படித்து வரும் இளைஞா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், மாணவா்கள் மற்றும் தோ்வா்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்எல்ஏ அன்னியூா் சிவா, தனது சொந்த நிதி மூலம் 100 புத்தகங்களை வாங்கி, கிளை நூலகா் மணிகண்டனிடம் அளித்தாா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினா் முகிலன், மாவட்டப் பிரதிநிதி சுதாகா், திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளா் சங்கா், துணை அமைப்பாளா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com