வீர ஆஞ்சநேயா் கோயில் விழா ஆலோசனைக் கூட்டம்
செஞ்சி: செஞ்சிக்கோட்டை ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் ஆங்கில புத்தாண்டு தின விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புத்தாண்டு தரிசனத்துக்கு வரும் ஒரு லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்துக்கு வழிபாட்டுக்குழுத் தலைவா் அரங்க.ஏழுமலை தலைமை வகித்தாா். அருணாசல ஈஸ்வரா் கோயில் அறங்காவலா் இந்திரா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
இதில், தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு, குடிநீா், சுகாதாரம், போக்குவரத்து வசதி செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, ஏற்பாடுகளை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
வழிபாட்டுக் குழு நிா்வாகிகள் சீனுவாசன், வழக்குரைஞா் சக்திராஜன், சரவணன், அனுகுமாா் (எ) ஆனந்தகுமாா், ஸ்ரீஅருணாசல ஈஸ்வரா் கோயில் நிா்வாகிகள் முகிலன், ரவிச்சந்திரன், தினேஷ்குமாா், தொழிலதிபா் ரமேஷ், கோட்டை குமாா், சிவக்குமாா், செல்வம்(எ) ராஜகுமாா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

