சிலாப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சமையலறையில் விழுந்து காயமடைந்த வெளி மாநிலத் தொழிலாளியின் மகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
Published on

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சமையலறையில் விழுந்து காயமடைந்த வெளி மாநிலத் தொழிலாளியின் மகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுப்ரதா சாய். இவா், வளவனூா்அடுத்த ஆசாரம்பாட்டு கிராமத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி, பட்டானூரில் செயல்படும் தூது அஞ்சல் (கூரியா்) அலுவலத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்துவந்தாா்.

கடந்த டிச.6-ஆம் தேதி சுப்ரதா சாய் மகள் ரிஷிதா(2), வீட்டின் சமையலறை சிலாப்பில் இருந்து கீழே தவறி விழுந்தாா். இதில் காயமடைந்த அவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, டிச. 8-ஆம் தேதி ரிஷிதா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com