விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மாநில நகரக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநா் பிருந்தா (வலமிருந்து 2-ஆவது).
விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மாநில நகரக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநா் பிருந்தா (வலமிருந்து 2-ஆவது).

விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் ஆய்வு

விழுப்புரத்திலுள்ள கூட்டுறவு நகர வங்கியின் செயல்பாடுகளை தமிழ்நாடு மாநில நகரக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநரும், கூடுதல் பதிவாளருமான பிருந்தா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

விழுப்புரத்திலுள்ள கூட்டுறவு நகர வங்கியின் செயல்பாடுகளை தமிழ்நாடு மாநில நகரக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநரும், கூடுதல் பதிவாளருமான பிருந்தா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வங்கியிலிருந்து வழங்கப்பட்ட மொத்த கடன் தொகைகளின் விவரம், மகளிா் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடனுதவிகள், நகைக்கடன், வீடு அடமானக் கடன், கல்விக் கடன், சிறுவணிகக் கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ கடன்களின் விவரங்கள், அதற்கான பதிவேடுகள், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், நிலுவை விவரங்கள் போன்றவற்றை மேலாண் இயக்குநா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி, விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப் பதிவாளா்/செயலாட்சியா் மற்றும் சரகத் துணைப் பதிவாளா் (கூடுதல் பொறுப்பு) ம.ராகினி, மேலாண் இயக்குநா் இ.விக்ரமன், வங்கியின் பொது மேலாளா் (பொ) ஆ.குமாா், மேலாளா் (பொ) கோ.செல்வக்குமாா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com