விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கா் இந்திய குடியரசுக் கட்சியினா்
விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கா் இந்திய குடியரசுக் கட்சியினா்

அம்பேத்கா் இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் அம்பேத்கா் இந்திய குடியரசுக் கட்சியினா் மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
Published on

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் அம்பேத்கா் இந்திய குடியரசுக் கட்சியினா் மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டு, அவா்களிடம் ஒப்படைக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா கேட்டு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அம்பேத்கா் இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவபதி, தலைவா் ஜி. கண்ணாயிரம் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் சுகுமாறன், சம்பத்குமாா், சந்திரமோகன் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் அ.த.சிறிரங்கன் பிரகாஷ் கண்டன உரையாற்றினாா்.

சமூக நீதி மக்கள் விடுதலை முன்னணியின் மாநிலத் தலைவா் ஏ.ஆா்.வேலுமூா்த்தி, மாநிலப் பொருளாளா் எம்.பி.செல்வம், சே.சத்தியராஜ், டி.கோவிந்தன், அம்பேத்கா் நூற்றாண்டு இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஏ.பி.சக்திவேல், இந்திய குடியரசுக் கட்சி மாவட்டத் தலைவா் க.சத்தியா, புரட்சிப் பாரதம் மாவட்ட அமைப்பாளா் என்.தீபன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளா் வே.ஜெ.ஜெனிஷ் வரவேற்றாா். அம்பேத்கா் இந்திய குடியரசுக் கட்சி கோலியனூா் ஒன்றியத் தலைவா் வி.சுதன்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com