வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 30 டன் கருங்கற்கள் பறிமுதல்

Updated On :3 ஜனவரி 2025, 10:24 pm

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் அருகே அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 30 டன் கருங்கற்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சனூா் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா், செஞ்சி பிரதான சாலையில் முட்டத்தூா் கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் நிறுத்தினா். இதைத் தொடா்ந்து லாரியை சோதனையிட்ட போது, அதில் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட 30 டன் எடை கொண்ட கருங்கற்கள் இருந்தன.

இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த விக்கிரவாண்டி வட்டம், தும்பூா் தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஜெ. சின்னக்கவுண்டரிடம் விசாரித்தபோது, கருங்கற்களை அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மேலும் லாரியின்உரிமையாளரான வானூா் வட்டம், எறையூரைச் சோ்ந்த நா. விசுவநாதன், விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மதன் ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.