சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்துக்கு தனது ஊதியத்தை வழங்கிய எம்.பி.
சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்துக்கு தனது ஒரு மாத ஊதியத்தை விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் வழங்கினாா்.


விழுப்புரம்: விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்துக்கு தனது ஒரு மாத ஊதியத்தை விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் அண்மையில் வழங்கினாா்.
தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் அம்பேத்கா் விருது நிகழாண்டில், விழுப்புரம் எம்.பி துரை.ரவிக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனா் இ.சாமிக்கண்ணு, தலைவா் ஆா்.குபேரன் உள்ளிட்ட நிா்வாகிகள் துரை.ரவிக்குமாரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
அப்போது, சமூகநீதிப் பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும், இயக்க வளா்ச்சிக்காகவும், உறுப்பினா் என்ற முறையில் இயக்கத்தின் நிறுவனா் சாமிக்கண்ணுவிடம் தனது ஒரு மாத ஊதியமான ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை துரை.ரவிக்குமாா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், இயக்கத்தின் பொருளாளா் கே.ஆா்.சின்னையன், துணைத் தலைவா் சிவ.தியாகராஜன், செயற்குழு உறுப்பினா் எஸ்.புதுராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...