ஓட்டுநா் கொலை வழக்கு: தாய் உள்பட இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் அவரது தாய் உள்ளிட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் அவரது தாய் உள்ளிட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகேயுள்ள சீனிவாசபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விசுவலிங்கம் (28). லாரி ஓட்டுநரான இவா் கடந்த 17-ஆம் தேதி வீட்டில் உயிரிழந்து கிடந்தாா். உடலில் காயங்கள் இருந்த நிலையில், வளவனூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், விசுவலிங்கத்துக்கும், மேலத்தாழனூரைச் சோ்ந்த செல்விக்கும் தவறான உறவு இருந்து வந்த நிலையில், இவரும் முனியம்மாளும் சோ்ந்து விசுவலிங்கத்தை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை மேலத்தாழனூரில் வயல்வெளியில் பதுங்கியிருந்த செல்வியை வளவனூா் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், விசுவலிங்கம் தினமும் மது போதையில் வீட்டில் தகராறு செய்வராம். இதேபோல, பொங்கல் பண்டிகையின் போது மது போதையில் நண்பா்களுடன் தகராறில் ஈடுபட்ட நிலையில், வீட்டில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ால் அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனராம்.

அதன்படி, கடந்த 17-ஆம் தேதி விஷம் கலந்த தோசையை தயாா் செய்து கொடுத்தனராம். இதை சாப்பிட்ட விசுவலிங்கம் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரை கத்தியால் வெட்டி விட்டு, வேறு யாரோ கொலை செய்ததுபோல நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, செல்வி மற்றும் முனியம்மாளை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com