குட்டையில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 2 வயது பெண் குழந்தை ஏரி குட்டையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 2 வயது பெண் குழந்தை ஏரி குட்டையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

திண்டிவனம் வட்டம், சாரம், இருளா் காலனி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா் - செல்வி தம்பதியின் மகள் சுமித்ரா (2). இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாட சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லையாம். பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்குட்டையில் குழந்தை சுமித்ரா இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com