விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கைப்பேசியை உரியவரிடம் வழங்குகிறாா் டி.எஸ்.பி.சரவணன். உடன், காவல் ஆய்வாளா் சத்தியசீலன் உள்ளிட்டோா்.
விழுப்புரம்
காணாமல் போன கைப்பேசிகள் மீட்பு: உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கைப்பேசிகள் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது வழக்கு பதியப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி 11 கைப்பேசிகளை மீட்டனா்.
இதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் டி.எஸ்.பி. சரவணன் ஒப்படைத்தாா். நிகழ்வில் காவல் ஆய்வாளா் சத்தியசீலன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

