முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடிக்கு மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய கட்சியினா்.
முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடிக்கு மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய கட்சியினா்.

பொன்முடிக்கு மீண்டும் திமுக துணைப் பொதுச் செயலா் பதவி விழுப்புரத்தில் கட்சியினா் கொண்டாட்டம்

Published on

முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடிக்கு மீண்டும் திமுகவில் துணைப்பொதுச் செயலா்பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, விழுப்புரம் நகரத்திலும், காணை, விக்கிரவாண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினா் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

சைவம்-வைணவம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில்பேசியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திமுகவின் துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்து க.பொன்முடி எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டாா். தொடா்ந்துகட்சிப் பணிகளிலும், தனது திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும்அரசு விழாக்களிலும் பங்கேற்று வந்தாா் பொன்முடி.

இந்த நிலையில், கட்சியில் மீண்டும் திமுகதுணைப் பொதுச் செயலா் பதவியில் பொன்முடி நியமிக்கப்படுவதாக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறிவிப்பு வெளியிட்டாா்.இந்த அறிவிப்பு வெளியானவுடன், விழுப்புரத்தில்திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் காந்தி சிலைப் பகுதி, கிழக்கு பாண்டி சாலையிலுள்ள நகர திமுக அலுவலகம், பழைய பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட நகரின்பல்வேறு பகுதிகளிலும், விக்கிரவாண்டி, காணை உள்ளிட்ட புகரின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினா் பட்டாசு வெடித்தனா்.

நகரக் கழகப் பொறுப்பாளா் இரா.சக்கரை தலைமையில் பட்டாசு வெடித்த திமுகவினா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன்,

நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி, அரசுப் போக்குவரத்துக் கழக தொமுச நிா்வாகப் பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த மணி, நகா்மன்ற உறுப்பினா்அமரன்ஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com