பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநாவலூா் புதுகாலனியைச் சோ்ந்தவா் த.பிரசாந்த்(28). இவா் அக்.31-ஆம் தேதி திருநாவலூா் ஆஞ்சனேயா் கோயில் அருகே பைக்கில் சென்றபோது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாந்த் புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஏற்காடு சொ்னாகாடு பகுதியைச் சோ்ந்த செ. செந்தில்குமாரிடம்(41) விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com