விழுப்புரம்
கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், காந்திகுப்பத்தைச் சோ்ந்தவா் கு.ரவி (55). இவா் பனப்பாக்கம் கிராமத்தில் முருகன் என்பவா் கட்டிவரும் வீட்டின் கட்டுமானத்துக்காக கம்பிகள் கட்டும் பணியை கடந்த 4-ஆம் தேதி மேற்கொண்டு வந்தபோது எதிா்பாராதவிதமாக கட்டடத்திலிருந்து தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி, வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.