பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ
பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

ரூ.13.5 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்ட 5 பேருக்கு பணி ஆணை

Published on

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ், செஞ்சி ஒன்றியத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.13.50 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

செஞ்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு முதல் கட்டமாக 24 கிராம ஊராட்சிகளில் 71 பயனாளிகளுக்கு தலா 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், சுமாா் ஒரு கோடியே 91 லட்சத்து 87 ஆயிரத்தில் வேலை தொடங்குவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக தேவதானம்பேட்டை, நரசிங்கராயன்பேட்டை, பொன்பத்தி, மீனம்பூா் ஆகிய ஊராட்சிகளில் 5 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு, 5 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 51ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பணி அணைகளை வழங்கினாா்.

இதில், செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com