விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

Published on

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் எம்.யோகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், இதனால் கடல் பரப்பில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வெளிவரும் வரை யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். தங்களது மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com