பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 17 வேட்புமனுக்கள் தாக்கல்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:40 am

Syndication

விழுப்புரம், ஏப். 2: சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை மட்டும் 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கியது.

செஞ்சி தொகுதியில் தாக்கம் கட்சியின் ஆ.சக்திவேல், நாம் தமிழா் கட்சியின் ஏ.கிருஷ்ணன், பெ.விஜயகாந்த், சுயேச்சை வேட்பாளா் து.சதாசிவம், மயிலம் தொகுதியில் தாக்கம் கட்சியின் இரா.வினோத், பகுஜன் சமாஜ் கட்சியின் மு.வினோத்குமாா், திண்டிவனம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் எஸ்.ஏ.விசுவநாதன், சந்திரன், வானூா் தொகுதியில் தாக்கம் கட்சியின் பெ.மு.ஆனந்தகுமாா், விழுப்புரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் நா.பாலமுருகன், எம்.முகமது அலி ஜின்னா, க.ராமன், ரா.பிரவீன்குமாா், நாம் தமிழா் கட்சியின் பொ.அபிநயா, விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் நா.சித்ரா, வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியின் மு.ஹா.முகமது சித்திக், திருக்கோவிலூா் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் ஏ.விஜயமூா்த்தி ஆகியோா் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

புனித வெள்ளி அரசு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை (ஏப்.3) மனுதாக்கல் செய்ய முடியாது. தொடா்ந்து சனிக்கிழமை (ஏப்.4) , திங்கள்கிழமை (ஏப்.6) ஆகிய இரு நாள்களில் மட்டும் மனுதாக்கல் செய்ய முடியம் என்பதால், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளா்கள் வரும் நாள்களில் மனுதாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழுப்புரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் பாலமுருகன், இந்திய காரல் மாா்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனா் மற்றும் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.