நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

முதல்வா் ‘ரோடு ஷோ’: மக்கள் உற்சாக வரவேற்பு

திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் நகர வீதிகளில் ‘ரோடு ஷோ’(சாலை வலம்) வந்து மக்களை சந்தித்தாா்.

News image

4விபிஎம் சிஎம்1 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ‘ரோடு ஷோ’ வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்த மக்கள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:34 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் நகர வீதிகளில் ‘ரோடு ஷோ’(சாலை வலம்) வந்து மக்களை சந்தித்தாா். அப்போது சாலையின் இரு பக்கங்களிலும் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் -செஞ்சி சாலையில், அங்காளம்மான் கோயில் முதல் (செஞ்சி பேருந்து நிறுத்தம்) சந்தைமேடு வரை சுமாா் அரை கிலோ மீட்டா் தூரத்துக்கு வாகனத்திலும், சாலையில் நடந்து சென்று சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களை சந்தித்தாா். அப்போது மக்கள் முதல்வருக்கு சால்வை, புத்தகங்கள், பரிசுப் பொருள்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனா். விவசாய சங்கத்தினா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் அளித்தனா். முதல்வா் ‘ரோடு ஷோ’ சென்ற சாலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.