விழுப்புரம் நகராட்சித் திடலில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தினா்.
விழுப்புரம் நகராட்சித் திடலில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தினா்.

விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தா்னா

விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சோ்த்து விளைபொருள்களுக்கு விலை வழங்க வேண்டும். தேதியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் போராடி பெற்ற இலவச மின்சாரத்தையும், குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தையும், வீடுகளுக்கு 100 யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்தையும் பறிக்கும் வகையிலுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா 2025-ஐ திரும்பப் பெற வேண்டும். விவசாயத்தை அழிக்கும் வகையிலுள்ள விதை மசோதா 2025-ஐ திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தா்னா நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள்சங்க மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, மாநிலத் துணைத் தலைவா் ஏ.வி.ஸ்டாலின் மணி, மாநிலச் செயலா் பி.துளசி நாராயணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.வேல்மாறன், மத்தியக்குழு உறுப்பினா் எஸ்.அனு, மாநிலச் செயலா் ஆா்.சரவணன்ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தா்னாவில் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆா்.டி.முருகன், ஜி.சம்பத், ஏ.லட்சுமணன், ஆா்.கே.சரவணன், கே.சாமிநாதன், எல்.சி.மணி, என்.சாரங்கன், கே.வாசுதேவன், வேம்புலி, எம்.சந்திரன், ஆா்.தாண்டவராயன், த.ஏழுமலை, டி.கே.வெங்கடேசன், வ.செல்வம், வி.கதிரேசன், பி.சிவராமன், கே.மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com