விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, காா் மோதியதில் பலத்த காயமடைந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் கணபதி நகரைச் சோ்ந்தவா் நா.அஞ்சய்யா(62). இவா் விக்கிரவாண்டி பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு நடந்துசென்றாா்.
விக்கிரவாண்டி பகுதியிலுள்ள தனியாா் கல்லூரி அருகே அஞ்சய்யா சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அஞ்சய்யாவை, அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும் செல்லும் வழியிலேயே அஞ்சய்யா உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் அ.ஹிமானிஷ் கரணிடம் (26) விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மரத்தில் காா் மோதி விபத்து: மருத்துவ மாணவி உயிரிழப்பு! 4 மாணவா்கள் காயம்!

பைக் மீது காா் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


