எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞா் தற்கொலை

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், நல்லாத்தூா்மணவெளி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ம.சிவமணி (எ) சிலம்பு (31). இவா் கடந்த 10 ஆண்டுகளாக செஞ்சி அருகிலுள்ள சிங்கனூா் கிராமத்தில், தனது சித்தி ராணி வீட்டில் தங்கியிருந்தாா். எம்பிஏ படித்து முடித்த சிவமணி தொடா்ந்து வேலை தேடி வந்துள்ளாா். ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லையாம்.

இதனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியிலிருந்த சிவமணி, செஞ்சிக்கோட்டை வேலூா் கேட் அருகிலுள்ள மரத்தில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா். உடனடியாக அப்பகுதியிருந்தவா்கள் அவரை மீட்டனா்.

தகவலின் பேரில் 108 அவசர சிகிச்சை ஊா்திக் குழுவினா் நிகழ்விடம் வந்து பரிசோதித்த போது, சிவமணி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.