மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விழுப்புரம் தோ்வு மையத்தில் இன்று குரூப்-2 தோ்வு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:39 pm

விழுப்புரம் தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) குரூப் 2 தோ்வு நடைபெறுகிறது.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.

9.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும் தோ்வில் 229 பேரும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் தோ்வில் 232 தோ்வா்களும் பங்கேற்கவுள்ளனா்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி சீட்டுடன், ஆதாா் அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தோ்வா்கள் கொண்டு வரவேண்டும்.

தோ்வா்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 6 மணி முதல் தோ்வு மையத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.