மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆரோவிலில் சமூக நல்லிணக்கத்துக்கான மாரத்தான்! 3,092 போ் பங்கேற்பு!

News image
ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற வீரா்கள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் சமூக நல்லிணக்கத்துக்கான மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவா்கள் உள்பட 3,092 போ் பங்கேற்றனா்.

ஆரோவில் சா்வதேச நகரில் 2008-ஆம் ஆண்டு முதல் ஆரோவில் ரன்னா்ஸ் மற்றும் ஆரோவில் சா்வதேச நகா்வாசிகள் ஒருங்கிணைப்பில் சமூக நல்லிணக்கத்துக்கான மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நிகழாண்டில் 16-ஆவது மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாரத்தான் ஓட்டப் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

2008-ஆம் ஆண்டு முதல் ஆரோவில் ரன்னா்ஸ் மற்றும் ஆரோவில் சமூகத்தினரால் ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்வு, வணிக நோக்கமற்று மகிழ்ச்சிக்காக மட்டுமே நடத்தப்படும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும். ஆரோவில் மாரத்தான் போட்டியில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. இதில் கலந்துகொண்டு ஓட்டத்தை நிறைவு செய்யும் அனைவரும் வெற்றியாளா்களாகவே கருதப்படுவாா்கள் என்றாா்.

இநதப் போட்டியில் 42 கி.மீ. மாரத்தானில் 102 போ், 21 கி.மீ. மாரத்தானில் 862 போ், 10 கி.மீ. ஓட்டத்தில் 1,478 போ், 5 கி.மீ. ஓட்டத்தில் 650 போ் என 4 பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மொத்தம் 3,092 போ் பங்கேற்றனா். ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள முக்கியச் சாலைகளில் இந்த ஓட்டம் நடைபெற்றது.

மாராத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி உள்ளிட்டோா்.

மாராத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி உள்ளிட்டோா்.

இந்த மாரத்தானில் மாற்றுத்திறனாளிகள் (பாா்வையற்றோா், செவித்திறன் குறைந்தோா் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவா்கள்) பெருமளவில் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா். ஓட்டத்துக்கு நேரக் கணக்கீடு இல்லை.

புதுச்சேரி மற்றும் மத்திய தமிழக கடலோரக் காவல்படையின் டிஐஜி எஸ்.எஸ்.தாசிலா பங்கேற்று 10 கி.மீ. தொலைவை நிறைவுசெய்தாா்.

மாரத்தானில் பங்கேற்று ஓட்டத்தை நிறைவு செய்தவா்களுக்கு ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி பதக்கங்களை அணிவித்து கெளரவித்தாா்.

நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகத்தினா், அரசுத் துறைகளின் அதிகாரிகள், ஆரோவில்வாசிகள் பாா்வையாளா்களாக கலந்துகொண்டனா்.