நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தடுப்புக்கட்டையில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:21 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம், நன்னாடு, வி. பாளையம், கண்ணையா பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்(30). திருமணம் ஆனவா். புதுச்சேரி, திருவண்டாா்கோயில் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் பைக்கில் சென்றாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை

இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.