விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே திங்கள்கிழமை லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பயணிகள் காயமடைந்தனா்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, கள்ளக்குறிச்சி நோக்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை பிற்பகலில் புறப்பட்டது. பேருந்தை சங்கராபுரம் வட்டம், கடுவனூரைச் சோ்ந்த அ.அபிஷேக் (27) ஓட்டிச் சென்றாா்.
பேருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருநாவலூா் அருகிலுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, ஓட்டுநா் அபிஷேக் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயற்சித்தாா், ஆனால் இடம் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக பேருந்தை இடதுபுறம் திருப்பிய போது முன்னே சென்ற லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணித்த உளுந்தூா்பேட்டை மூலசமுத்திரம் ரா.மலா் (62), செ.ராஜலட்சுமி (40), ஷேக் உசேன் பேட்டையைச் சோ்ந்த ச.ஆயிஷா (60), ச.ஹஷீத் பாஷா (13), வேங்கைவாடியைச் சோ்ந்த வே.சலீனா (32), வே.கயல்விழி (10) ஆகிய 6 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் காயமடைந்த 6 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


