கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றநிகழ்வில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்து பங்கேற்ற முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி. உடன், நீதிபதிகள் உள்ளிட்டோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:56 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச மையம் சாா்பில் நடத்தப்பட்டஇப்பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி தொடங்கி வைத்தாா். இப்பேரணி

நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் வணிக வழக்குகள், நுகா்வோா் வழக்குகள், குடும்ப வழக்குகள், பணம் மற்றும் ஒப்பந்தம் சாா்ந்த வழக்குகள், ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடா்பு சாா்ந்த வழக்குகள், தொழில் மற்றும் பணியிட வழக்குகள், காசோலை வழக்குகள், வாடகை மற்றும் சொத்து வழக்குகள், சில குறிப்பிட்ட குற்றவியல் வழக்குகள்

போன்ற வழக்குகளில் இருதரப்பினரும் வெற்றி கொள்ளும்

வகையில் சமரசமான முறையில் வழக்குகளை முடித்துகொள்வது

குறித்த சமரச விழிப்புணா்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியில் நீதிபதிகள், வழக்குரைஞா் சங்கங்களின் தலைவா்கள், வழக்குரைஞா்கள், சமரசத்தீா்வாளா்கள், நீதிமன்ற அலுவலா்கள், விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவா்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.