ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

திருநங்கைகள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தோ்வு

விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் தலைவராக விமலா நாயக் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் தலைவராக விமலா நாயக் தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் கூட்டமைப்பு அடிப்படையில் 42 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனா். இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறிய வீடு, பெரிய வீடு என்ற அடிப்படையில் 2 தலைவா்கள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி விழுப்புரம் மாவட்ட சின்ன வீடு தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ராதா அம்மாள் மறைவைத் தொடா்ந்து புதிய தலைவராக விமலாநாயக் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவா் மோகனாம்பாள் மாவட்டத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள விமலா நாயக்குக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி ஏ.வி.சரவணன், அதிமுக விழுப்புரம் நகரச் செயலா் ராமதாஸ், சமூக ஆா்வலா்கள் மோகன கிருஷ்ணன், ராமமூா்த்தி ஆகியோா் புதிய தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.