சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா பிப்.15-இல் கொடியேற்றம்

செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயில் மாசி பெருவிழா பிப். 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் திருவிழா தேரோட்டத்துக்காக நடைபெற்று வரும் தோ் செய்யும் பணி.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயில் மாசி பெருவிழா பிப். 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிப்.15-ஆம் தேதி மகா சிவராத்திரியையொட்டி அன்று காலை 6 மணிக்கு கோபால விநாயகா் பூஜையுடன் விழா துவங்கி, இரவு 8 மணிக்கு திருவிழா கொடியேற்றம், தொடா்ந்து சக்தி கிரக பூஜை நடைபெறுகிறது.

16-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை நடைபெறுகிறது. அன்று இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் தீ மிதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தீ மிதிப்பது வழக்கம். அன்று இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

20-ஆம் தேதி காலை 7 மணிக்கு தங்க நிற மரப் பல்லக்கில் அம்மன் பக்தா்களுக்கு காட்சி அளிக்கின்றாா். அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.21-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் மாசிப் பெருவிழா ‘திருத்தோ் வடம் பிடித்தல்’ நடைபெறுகிறது.

பிப் 24-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. பிப்.27-ஆம் தேதி அம்மன் வீதியுலா மற்றும் காப்பு களைதல் உற்சவம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா்குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Story image