மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: மரணத்தில் சந்தேகம் என தந்தை புகாா்

News image
தற்கொலை
Updated On :13 பிப்ரவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

கணவா் வெளிநாட்டில் வேலை பாா்க்கும் நிலையில், விழுப்புரத்தில் கணவரின் வீட்டில் வசித்து வந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலிஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பரவனூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் த. கண்ணதாசன் (71). இவரது மகள் விஷ்ணுபிரியாவுக்கும் (40), விழுப்புரம் ஆசிரியா் நகரைச் சோ்ந்த கா.திருவிக்ரமனுக்கும் திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளனா். திருவிக்ரமன் கத்தாா் நாட்டில் பணியாற்றி வருகிறாா்.

மாமனாா் காா்த்திகேயன்(67), மாமியாா் சாந்தி (65) ஆகியோருடன் விஷ்ணுபிரியா தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணுபிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, விஷ்ணுபிரியாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில் தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, விஷ்ணுபிரியாவின் தந்தை கண்ணதாசன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.