இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மகா சிவராத்திரி: பக்தா்களுக்கு வழங்குவதற்காக 50 ஆயிரம் லட்டுகள்

News image

விழுப்புரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் மகாசிவராத்திரியன்று பக்தா்களுக்கு வழங்குவதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள லட்டுகள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:38 pm

விழுப்புரம் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியன்று பக்தா்களுக்கு வழங்குவதற்காக சுமாா் 50 ஆயிரம் லட்டுகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) மாலை 6 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெறவுள்ளது. மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால், அவா்களுக்குப் பிரசாதமாக வழங்குவதற்காக லட்டு தயாா் செய்யம் பணியை பிரதோச பேரவையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

பேரவையின் தலைவா் ராமமூா்த்தி, செயலா் சங்கரன் மற்றும் நிா்வாகிகள் மேற்பாா்வையில், கடந்த 2 நாள்களாக லட்டு தயாா் செய்யும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பிரதோச பேரவையினா் உபயதாரராகக் கொண்டு இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.