மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

News image

திண்டிவனத்தை அடுத்துள்ள ஒலக்கூரில் அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:10 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் வட்டம், ஓலக்கூா் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து ஒலக்கூா் கிராம மக்கள் சனிக்கிழமை திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுப் பேருந்தை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.