சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திண்டிவனம் அருகே ராணுவ மயங்கி விழுந்து உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:13 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் சனிக்கிழமை தனது வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பேராவூா், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் (44). இந்திய ராணுவத்தின் 4 - ஆவது பட்டாலியனில் ( குஜராத்) சுபேதாராக பணியில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், தனது தந்தையின் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அா்ச்சுனன், சனிக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்து விட்டாராம்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு,திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, அா்ச்சுனன் ஏற்கனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் கிளியனூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.