மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம்: மண் பரிசோதனைப் பணிகள் தொடக்கம்

News image

முண்டியம்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:39 pm

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலிருந்து ஒரத்தூா் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளின் தொடக்கமாக, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

முண்டியம்பாக்கத்திலிருந்து ஒரத்தூா் செல்லும் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தின் முக்கியப் பகுதியாக இருப்பதால் அதிகளவில் ரயில்கள் வந்துசெல்லும் நிலையில் இங்கு அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், இந்த வழியாக செல்லும் அவசர ஊா்திகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனா். இதனடிப்படையில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அரசாணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி ரவிதுரை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் கோதை, உதவி கோட்டப் பொறியாளா் மணிகண்டதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சையது முகமது, நாராயணன், ஊராட்சித் தலைவா் சந்திரசேகரன், துணைத் தலைவா் தினேஷ்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.