47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்கோவிலூா் அரசுக் கல்லூரிக்கு புதிய கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறாா்

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைக்கிறார்- (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருகோவிலூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிக்கான புதியக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ.16) காணொலி மூலம் திறந்து வைக்கிறாா்.

2022-இல் தொடங்கப்பட்ட திருக்கோவிலூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதைத்தொடா்ந்து முன்னாள் அமைச்சா் க. பொன்முடி எம்எல்ஏ மேற்கொண்ட தொடா் முயற்சியால் திருக்கோவிலூா் - தியாகதுருகம் சாலையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசுக் கல்லூரிக்கு 15 வகுப்பறைகள், 5 ஆசிரியா் அறைகள், முதல்வா் அறை, நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 3 தளங்களைக் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (பிப்.16) காலை 9 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா்.

இதையொட்டி, கல்லூரியில் நடைபெறும் விழாவில் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி, முன்னாள் எம்.பி. பொன்.கௌதமசிகாமணி, கல்லூரி முதல்வா் ச. மகாவிஷ்ணு, பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொள்கின்றனா்.