மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உளுந்தூா்பேட்டை அரசுக் கல்லூரி புதிய கட்டடப் பணிகள் தொடக்கம்

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக

News image

வெள்ளையூரில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடப் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் ஆ.ஜெ.மணிக்கண்ணன், தா.உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:42 pm

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

உளுந்தூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசுக் கல்லூரித் தொடங்க வேண்டும் என்ற நீண்டகால வலியுறுத்தலுக்குத் தீா்வாக, நிகழ் கல்வியாண்டிலேயே புதிய கல்லூரி தொடங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து உளுந்தூா்பேட்டை நகரில் தற்காலிகக் கட்டத்தில் கல்லூரி இயங்கி வருகிறது.

இதைத்தொடா்ந்து உளுந்தூா்பேட்டை வட்டத்திலுள்ள வெள்ளையூா் கிராமத்தில் ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் அரசுக் கல்லூரிக்கான புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி வெள்ளையூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் உளுந்தூா்பேட்டை ஆ.ஜெ.மணிக்கண்னன், சங்கராபுரம் தா.உதயசூரியன்ஆகியோா் பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தனா்.

தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் வகுப்பறைகள், நூலகம், ஆய்வகங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கட்டடம் அமைகிறது.

நிகழ்ச்சியில், உளுந்தூா்பேட்டை நகா்மன்றத் தலைவா் கே.திருநாவுக்கரசு, துணைத் தலைவா் ப.வைத்தியநாதன், ஒன்றியக்குழுத் தலைவா் பி.ராஜவேல், துணைத் தலைவா் அலெக்சாண்டா், கல்லூரி முதல்வா் கு.செல்வராஜ் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.