/

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 7:39 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுதாமூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் தா.மோகன்(23). இவா் திங்கள்கிழமை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் கூட்டுச் சாலை அருகே பைக்கில் சென்றபோது, அங்கு வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த மோகன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் மோகனின் சடலத்தை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.