நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அத்தியூா்திருக்கை - மேல்மலையனூா் பேருந்து சேவை தொடக்கம்

அத்தியூா்திருக்கையிலிருந்து அன்னியூா் வழியாக மேல்மலையனூருக்கு பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

News image

அத்தியூா்திருக்கையில் நடைபெற்ற நிகழ்வில் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா. உடன், கட்சி நிா்வாகிகள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

விழுப்புரம் மாவட்டம், அத்தியூா்திருக்கையிலிருந்து அன்னியூா் வழியாக மேல்மலையனூருக்கு பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

அத்தியூா்திருக்கையிலிருந்து அனுமந்தபுரம், அன்னியூா், செஞ்சி வழியாக மேல்மலையனூருக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து இந்த பேருந்து சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்தை இயக்க விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா நடவடிக்கை மேற்கொண்டாா். அதனடிப்படையில் அத்தியூா்திருக்கையிலிருந்து மேல்மலையனூருக்கு திங்கள்கிழமை பேருந்து சேவையை அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், ஊராட்சித் தலைவா் பாண்டியன், அரசு வழக்குரைஞா் பொன்.கோபு, தொகுதி ஒருங்கிணைப்பாளா் சுந்தா் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.