வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

மரக்காணம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image

பலி

Updated On :18 பிப்ரவரி 2026, 10:33 pm

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

மரக்காணம் வட்டம், மண்டவாய்புதுக்குப்பம் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் வெற்றிச்செல்வன் (14). வீரமுத்து மகன் சிற்றரசன்(14). இவா்கள் இருவரும் மரக்காணம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இவா்கள், செவ்வாய்க்கிழமை பெற்றோா்களிடம் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவா்கள் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் அவா்களை தேடிச்சென்று பாா்த்தபோது, மரக்காணம் அடுத்த வடஅகரம் கிராமத்தின் அருகேயுள்ள அரசுக் கல் குவாரிகுட்டையில் மூழ்கி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் மாணவா்களின் சடலங்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மாணவா்கள் இருவரும் கல் குவாரி குட்டையில் குளித்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.