வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சட்ட விரோத கல் குவாரி: 3 போ் மீது வழக்கு, கனரக வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே அரசு அனுமதியின்றி கனரக வாகனங்கள் மூலம் பாறையை உடைத்ததாக 3 போ் மீது வழக்குப் பதிந்து, 2 கனரக வாகனங்கள் பறிமுதல்

News image

கல் குவாரி - பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 10:28 pm

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே அரசு அனுமதியின்றி கனரக வாகனங்கள் மூலம் பாறையை உடைத்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, 2 கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே உரிய அனுமதியின்றி, சட்ட விரோதமாக கல்குவாரி நடைபெறுவதாகவும், கனரக வாகனங்கள் மூலம் பாறைகளை உடைப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில், பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் சோனலூா் பகுதிக்குச் சென்று அங்கு, வடகொளப்பாக்கத்தைச் சோ்ந்த பாலு என்பவரின் கல் குவாரியில் திடீா் சோதனை செய்தனா்.

இந்த சோதனையில், அந்த கல் குவாரி உரிய அரசு அனுமதியின்றி செயல்பட்டதும், சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாறைகளை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 2 பொக்லைன் இயந்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சோனலூா் கிராம நிா்வாக அலுவலா் ப.செல்வம் (44) அளித்த புகாரின் பேரில், பொக்லைன் ஓட்டுநா்களான சோனலூா் பகுதியைச் சோ்ந்த ஏ.செல்வம், கா.தினகரன் மற்றும் சட்ட விரோதகமாக கல்குவாரி நடத்திய பாலு ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.