மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையானூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப். 21 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

News image

உள்ளூர் விடுமுறை - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:35 pm

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையானூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப். 21 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பிப். 21 ஆம் தேதி திருத்தோ் உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி

நிறுவனங்களுக்கும் பிப். 21 ஆம்தேதி உள்ளுா் விடுமுறை விடப்படுகிறது. எனினும், அவசரஅலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளா்களைக் கொண்டு இயங்கும்.

இந்த விடுமுறை நாளில் (பிப்.21) மாணவ,மாணவியருக்கு பள்ளி, கல்லூரி இறுதித் தோ்வுகள் இருந்தால், அந்த தோ்வுகள் திட்டமிட்டப்படி அன்றைய தேதியில் நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.