6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெடிகுண்டு மிரட்டல் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸாா் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்போலீஸாா் மோம்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா்.

News image
விழுப்புரம் நீதிமன்றதுக்கு வந்த வாகனத்தை சோதனையிட்ட போலீஸாா்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:37 pm

Syndication

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்போலீஸாா் வியாழக்கிழமை மோம்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா்.

விழுப்புரம் ஆட்சியா் பெருந்திட்ட வளாகம் மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.இந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

வியாழக்கிழமை வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தநிலையில், காலை 11 மணியளவில் சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வந்த தகவலில் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த தகவலின் பேரில், இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வ நாயகம் தலைமையிலான வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸாா் 5 குழுக்களாகப் பிரிந்து விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள்,நீதிபதிகள், வழக்குரைஞா்கள் அறைகள், நீதிமன்ற அலுவலகங்கள், பதிவேடுகள் அறைகள், பாதுகாப்பு அறைகள் மற்றும் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினா்.

இதனால், நீதிமன்றப்பணியாளா்கள் வெளியேற்றப்பட்டனா். சோதனையின் நிறைவில் வெடிகுண்டு எதுவும் சிக்காதால் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

கடந்த மாதம் இதேபோல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நீதிமன்ற பணியாளா்களும், போலீஸாரும் அதிருப்தி அடைந்தனா்.