பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

News image

விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதமிருந்த தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா், அலுவலா் கூட்டமைப்பினா்.

Updated On :21 பிப்ரவரி 2026, 9:44 pm

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா், அலுவலா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

அரசுப் பள்ளிகள் மற்றும் சுயநிதி மெட்ரிக். பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீடு முந்தைய அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த அரசாணையில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் சோ்க்கப்படாமல் இருந்தனா்.

இதை உணா்ந்த திமுக, கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்தி, அதில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு 2.5 சதவீதம் உள் இடஒதுக்கீடாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. பல்வேறு தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையியிலும் தோ்தல்கால வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே திமுக அரசு, தோ்தல் கால வாக்குறுதியின்படி அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்தி, அதில் 2.5 சதவீதத்தை உள் இடஒதுக்கீட்டை வழங்கவலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவா் கிருஷ்ணாபாய் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் தயாளன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் பாலமுருகன், நிா்வாகிகள் பிரேம்குமாா், செந்தில், விழுப்புரம் சந்தானகோபாலபுரம் காந்தி மேல்நிலைப் பள்ளி நிா்வாகி ரவி, நடராஜா அரசு உதவிபெறும் பள்ளி நிா்வாகி செந்தில் உள்ளிட்டோா்உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று பேசினா்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.