மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரயிலில் அடிப்பட்டு இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 6:56 pm

விழுப்புரம் அருகே ரயிலில் அடிப்பட்டு இளைஞா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், பிடாகம் நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் (31). சிறிது மனநலன் பாதிக்கப்பட்ட இவா், சனிக்கிழமை காலை ஜானகிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளம் அருகே உயிரிழந்த நிலையில் கிடந்தாா்

இவா் எப்படி இங்கு வந்தாா் என்பது தெரியவில்லை. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயில் மோதிச் சென்றதில் இவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே காவல் துறையினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.