மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெவ்வேறு விபத்துகள்: பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:36 pm

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் சிக்கி பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திண்டிவனம் வட்டம், எறையானூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மனைவி அங்கம்மாள் (55). இவா், திண்டிவனத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை, திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் எறையானூா் பகுதியில் அங்கம்மாள் நடந்து சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காவலாளி உயிரிழப்பு: தென்காசி மாவட்டம், சிவநாடானூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சா. சந்திரன்(60). இவா், விழுப்புரம் வழுதரெட்டி காமராஜா் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி, விழுப்புரத்தில் உள்ள துணிக்கடையில் காவலாளியாக (செக்யூரிட்டி) வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சந்திரன் தனது பைக்கில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் சொகுசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.