திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், கோட்டிக்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செ.காசிநாதன்(72). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் அருகில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றாா். அப்போது அங்கு மின் கம்பத்திலிருந்து அறுந்து கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து காசிநாதன் தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, காசிநாதன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.