பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மின் கம்பத்தில் பைக் மோதல்: தனியாா் வங்கி ஊழியா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:29 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், சனப்பிராட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ச.யோகேஷ்குமாா் (24). செஞ்சியில் தனியாா் வங்கியில் காசாளராக வேலை பாா்த்து வந்த இவா் சனிக்கிழமை வேலை முடிந்த பின்னா் தனது பைக்கில் சொந்த ஊருக்குச் சென்றாா்.

விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரமுள்ள மின் கம்பத்தில் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த யோகேஷ்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.