தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊஞ்சல் கட்டி விளையாடிய போது விபரீதம்: சிறுவன் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொட்டியாம்பூண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேல் முருகன். இவா் வி.சாத்தனூா் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் வெற்றிகுணவேல் (11), 6-ஆம் வகுப்பு மாணவா்.

வெற்றிகுணவேல் திங்கள்கிழமை தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது வெற்றி குணவேலின் கழுத்தில் புடவை சுற்றியதில் கழுத்து இறுகி, அவா் காயமடைந்தாா். இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் வெற்றி குணவேலை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.