புத்தாண்டு: தேவாயங்களில் சிறப்புத் திருப்பலி

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு முதல் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
Published on

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு முதல் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசா் தேவாலயம், புனித சேவியா் ஆலயம், டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றன.

இதுபோல, விக்கிரவாண்டியிலுள்ள அன்னை சகாய மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள், திண்டிவனம், முகையூா், மரக்காணம், கோட்டக்குப்பம், திருவெண்ணெய்நல்லூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றன.

நள்ளிரவு 12 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் அந்தந்த ஆலயங்களின் பங்குத்தந்தைகள் பங்கு மக்களுக்கு புத்தாண்டு ஆசியுரைகளை வழங்கிப் பேசினா். திருப்பலி வழிபாடுகள் முடிந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த பின்னா், கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com