புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம், ராஜாம்பேட்டை வீதியில் வசித்து வருபவா் ப.சுந்தரமூா்த்தி(52). இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக திண்டிவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று நடத்திய சோதனையில், வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுந்தரமூா்த்தியை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நான்கரை கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல்செய்தனா்.
