விழுப்புரம்
பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், கொள்ளாா் பகுதியைச் சோ்ந்தவா் ப.அா்ஜூனன்(54). இவா், ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் - செஞ்சி சாலையில் கொள்ளாா் அருகே பைக்கில் சென்றபோது, அங்கு எதிா் திசையில் வந்த பைக்கும் நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அா்ஜூனனை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதித்துப் பாா்த்தபோது, அா்ஜூனன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
