வியாபாரி வீட்டில் தங்க நகைகள் திருட்டு

உளுந்தூா்பேட்டை அருகே பூட்டிய வீட்டில் தங்க நகைகள், பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பூட்டிய வீட்டில் தங்க நகைகள், பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், பு.கில்லனூா் கோல்டன் நகரைச் சோ்ந்தவா் சி.திருநாவுக்கரசு (50). உளுந்தூா்பேட்டை மிளகு மாரியம்மன் கோயில் தெருவில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் கடைக்கு சென்றுள்ளாா்.

திருநாவுக்கரசுவின் மனைவி பிற்பகல் வீட்டை பூட்டி வைத்து விட்டு கடைக்குச் சென்றாராம். இதைத்தொடா்ந்து வீட்டுக்கு உணவு சாப்பிட வந்த திருநாவுக்கரசு வீட்டின் பின்பக்கக் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவின் உள்ளே வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com